கேள்வி:இவ்வளவு காலமும் போராடாமல் அணுஉலை செயல்பட போகும் தருணத்தில் போராட்டம் நடத்துவது நியாயமா?
உண்மை:
கூடன்குளம் அணுஉலை அமைக்கும் திட்டம் 1988-ல் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் சோவியத் ரஷ்யாவின் ஜனாதிபதிகோர்பசேவ் அவர்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.ஆனால் இது பற்றி பேசப்படும் போதே அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
1987-ல் இடிந்தகரையில் போராட்டம்
இப்போது தொடர் போராட்டம் நடந்து வரும் இடிந்தகரையில் 1987-ல் பாளை சண்முகம் சென்னை ஞானி,தோழர் ஜி.ரமேஸ் போன்றோர் இந்த எதிப்பு கூட்டத்தை முன்னின்று நடத்தினர்
26-11-1988-ல் கருப்பு கொடி
கூடன்குளம் அணுஉலை ஒப்பந்தம் 26-11 1988-ல் கையெழுத்தானது.
அன்று இந்த ஒப்பந்ததை எதிர்த்து டெல்லியில் கருப்பு கொடி காட்டினர்.
அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.இது போலவே மும்பையிலும் கருப்பு கொடி காட்டப்பட்டது
போராட்டம்
இதைத் தொடர்ந்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் அணுஉலைக்கு எதிராக பல இடங்களில் கருத்து பரப்புரை செய்தனர்புரட்சிகர இளைஞர் பேரவையினர் சென்னையிலிருந்து கூடன்குளம் வரை மிதிவண்டி பேரணி நடத்தினர்.சமத்துவ சமுதாய இயக்கத்தினர் திரு.டேவிட் அவர்கள் தலைமையில் பல எதிர்ப்பு கூட்டங்களை பல்வேறு இடங்களில் கூட்டினர்.
போராளி அன்டன் கோமஸ்
போராளி அன்டன் கோமஸ் 1989-மார்ச் 20ல் ஜார்ஜ் பர்னாண்டஸ் தலைமையில் தூத்துக்குடியில் அணு உலை எதிர்ப்பு கூட்டம் நடத்தினார்.
அய்.பி.எப் தோழர் பால்ராஜ், மற்றூம் ட்.எஸ்.எஸ்.மணி, பாலசுந்தரம் ,பாண்டியன் போன்றோர் கருத்துப் பரப்புரையில் ஈடுபட்டனர்.
குஜராத் மற்றும் கல்கத்தா
தேசிய மீன் தொழிலாளர் பேரவையின் தோற்றுனரும் தலைவருமான கோவா மத்தானி சல்தான அவர்கள் தலைமையில் 1989-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் மற்றும் கல்கத்தாவில் நீண்ட அணு உலை எதிர்ப்பு பயணம் தொடங்கி நீரைக் காப்போம் உயிரைக்காப்போம் என்ற கோஷத்துடன் கன்னியாகுமரியை நோக்கி வந்தது.இப்போராட்டத்தில் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அருள் பணியாளர்கள் டாம்கொச்சேரி மற்றும் செர்வாசியுஸ் என்பவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல போராட்டங்கள் நிகழ்ந்தது.அவைகளை நாளை குறிப்பிடுகிறேன்
நன்றி:ச.தே.செல்வராசு (கூடன்குளம் அணுமின்நிலையம் கேள்விகளும் ஊண்மைகளும்)
Share | Tweet |
|
அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள். நன்றி.
ReplyDeleteநன்றி நண்பா
Deleteநல்லது நடந்தா சரி...நடக்கும் என்று நம்புவோம்...
ReplyDeleteநடக்கும் நண்பா
Deleteஅறியாத பல தகவல்கள்..!!
ReplyDeleteநன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
Deleteஅடித்து ஆடுங்கள்...
ReplyDeleteநன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
Deleteஅணுமின்சாரம் இல்லாமல் எப்படி மக்களுக்கு மின்சாரம் தருவது. இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாமல் வாழ்க்கையே இல்லாமல் ஆகிவிட்டது. அணு மின்சார எதிர்ப்பாளர்களை பேட்டி கண்டு எழுதி உள்ளீர்கள். அதேபோல் அணு உலைக்கு ஆதரவாளர்கள் யார் என்று கண்டறிந்து பேட்டி கண்டு எழுதி இருக்க வேண்டும். ஒருதலைப் பட்சமாக எழுதி இருப்பது சரியல்ல.
ReplyDeleteஅன்பு மு.நாட்ராயன் அவர்களே
Deleteஅணுமின்சாரம் இல்லாமல் எப்படி மக்களுக்கு மின்சாரம் தருவது///
நமது நாட்டில் அணுமின்நிலையம் மூலம் தாயாரிக்கும் மின்சாரம் வெறும் 3 சதவிகிதம் தான்.மற்ற 97 சதவிகிதம் மாற்று வழி மின்சாரம் தான்
இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாமல் வாழ்க்கையே இல்லாமல் ஆகிவிட்டது.///
ஆம் உண்மைதான்.ஆனால் மாற்று வழி மூலம் மின்சாரம் தயாரிக்கலாமே.
நான் அறிந்துக்கொள்ளாத நல்ல வரலாற்று முக்கியமான தகவல்கள் நண்பரே, இப்பொழுதுதான் தங்களது வலைக்கு வருகிறேன்.அழகாக உள்ளது.மிக்க நன்றி.தொடருங்கள்.
ReplyDeleteநன்றி நண்பா.....வருகைக்கும் கருத்துக்கும்
DeletePlease post advantage of மாற்று வழி மின்சாரம். how long It'll run
ReplyDelete97 சதவிகிதம் மாற்று வழி மின்சாரம் மூலம் தான் தயாரிக்கப்படுகிறது.இதுவே advantage தானே அனாமதேயரே
DeleteINNUM AAZHAMAANA VIRIVAANA VILAKKAM EZHUTHAVUM.Dr.SANTHI LAL
ReplyDeleteஎன்ன எழுத வேண்டும்
Deleteசரியான கட்டுரை நண்பரே...இயற்கையை அழிக்க 10 பேர் கிளம்பினால்,அதைக் காக்க 10 பேர் கிளம்புவார்கள்.
ReplyDelete