Social Icons

  • Monday, April 23, 2012

    12 கூடன்குளம் கேள்விகளும் உண்மைகளும் [பகுதி 3]

    முந்தைய பகுதிகளை படிக்க பகுதி 1 பகுதி 2

    கேள்வி:
    இன்று வரை கூடன்குளம் அணு உலைக்கு 21000 கோடி செலவழித்தாக சொல்லப்படுகிறது.இவ்வளவு செலவு செய்தும் பயனில்லாது கிடப்பில் போடுவது சரியா?



    உண்மை:
            1988-ம் ஆண்டு 1000 மெகாவாட் திறன் கொண்ட 2 உலைகளுக்கும் சேர்த்து 6000 கோடி செலவாகும் என்றார்கள்.2001ஆம் திட்டத்தின் படி இத்திட்டத்தின் மொத்த செலவு 13,171 என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது .போராட்டக்குழு முதல்வர் அவர்களை சந்தித்த போது அணு உலைக்கான செலவு 20000கோடி என்றனர்.இப்போது 21000 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்கின்றனர்.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை
       
                   அணு சக்திகள் குறித்த சரியான விபரங்கள் மக்களுக்குச் சோல வேண்டியதில்லை.ஏன் பாராளுமன்றத்திற்கோ அல்லது அமைச்சரவை கூட்டத்திற்கோ தெரிவிக்க வேண்டியதில்லை.பிரதமருக்கு மட்டும் சொன்னால் போதும் என்ற புரிதல் இங்கு இருந்து வருகிறது.அணு உலைகளுக்கெல்லம் செய்யப்படும் செலவு மக்களுடைய வரிப்பணம்.எனவே வரிப்பணம் கொடுப்பவர்கள் தாங்கள் கொடுக்கும் வரிப்பணம் எப்படியெல்லாம் செலவு செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ள உரிமை உண்டல்லவா?பணத்தை மறைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும்.ஏற்கனவே நம் நாடு உழலுக்கு பேர் போன நாடு என்பது அனைவரும் அறிந்ததே
        
                 மேலும் ஏழை மக்கள் 83% மறைமுகவரி செலுத்துகின்றனர்.மறைமுகவரி செலுத்துபவர் வரி ஏய்ப்பு செய்ய முடியாது.எடுத்துக்காட்டாக ஒரு டீயின் விலை ரூ5 என வைப்போம்.இதில் எல்லா மறைமுக வரிகளையும் கழித்தால் ஒரு டீ ரூ2 ரூபாய்க்கு கிடைக்கும்.நேர்முக வரி வெறும் 17% தான்.நேர்முக வரி செலுத்துபவர் வரி ஏய்ப்பு செய்யலாம்.மறைமுக வரி செலுத்தும் சாமானியர்கள் தங்கள் கொடுத்த வரிப்பணத்தைக் காட்டிலும் தங்கள் உயிரையே பெரிதாக மதித்து அணு உலையை எதிர்க்கிறார்கள்.இது நியாயமில்லையா?
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    12 comments:

    1. பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் அன்பரே

      ReplyDelete
    2. நல்லது நடக்கும் என்று நம்புவோம்...

      ReplyDelete
    3. இது நியாயமில்லையா?

      India is Hitler's Germany...

      ReplyDelete
    4. உங்க விளக்கமான கமண்டுக்கு நன்றி...முக புத்தக விஷயத்தை புரிய வைத்ததுக்கு நன்றிகள்!

      ReplyDelete
    5. பல புதிய தகவல்கள் ....நன்றி...

      ReplyDelete
    6. அருமையான விளக்கப்பதிவு நண்பரே..மிக்க நன்றி

      ReplyDelete
    7. பகிர்வுக்கு நன்றி தோழரே

      எழுத்துரு மாற்றி-களை பற்றி தொடர் பதிவு ஒன்று எழுதுங்களேன் ...

      ReplyDelete
    8. உண்மையான தகவல் இந்த செய்தி அனைவரையும் சென்று சேர எனது முகநூலிலும்(facebook பகிர்கிறேன்

      ReplyDelete
    9. உண்மை தகவல் தம்பி

      ReplyDelete
    10. நியாயமான கேள்வி....பதில் சொல்லுமா அரசு? .... எந்த அரசாலும் இதற்க்கு பதில் சொல்ல முடியாது என்பது வேறு விடயம். கோமாளிகளின் ராஜ்ஜியம்.

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers