Social Icons

 • Tuesday, April 17, 2012

  14 செர்னோபில் அணுஉலை

  அணுஉலை என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் நினைவுக்கு வருவது செர்னோபில் தான்.இப்போது புகுஷிமா.சோவியத் யூனியனில் இருந்த உக்ரேனின் வடக்கே உள்ள செர்னோபில் நகரில் 1986 ஏப்ரல் 26-ந்தேதி அங்கிருந்த 4-வது அணு உலை வெடித்து சிதறியதஉடனே அந்த அணு உலை மூடப்பட்டது.ஆனால கதிரியக்கம் செர்னோபில்லின் சுற்றுப்பகுதி முழுவதும் பரவியது.காற்று வீசிய திசையிலமைந்திருந்த பெலாரஸ் நகர் பெருமளவு பாதிக்கப்பட்டது.

           மேலும் வேல்ஸ்,அயர்லாந்து,இத்தாலி,கிரீஸ்,அலாஸ்காவின் கடற்கரை பகுதிகளிலும் கதிரியக்கம் பரவிவிட்டது.உக்ரேனின் 46 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பும் பயனற்று போனது.இது உலகிலேயெ மிக வளமான விவசாய நிலம் என்பது வேதனையான விஷயம்


  பாதிப்புகள்                        அணு உலை வெடித்ததும் வெறும் 28-பேர் தான்.அணு உலை வெடித்ததும் 5020 டன் சிமிண்டு கொண்டு மூடப்பட்டது.ஆனாலும் 10 நாட்களில் 71 சதவீதம் கதிரியக்கம் காற்றில் கலந்தது இதனால் பெலாரஸ் நகரில் 23 சதவீத நிலப்பரப்பும் சோவியத் யூனியனின் 1.5 சதவீத நிலப்பரப்பும் கதிரியக்கத்துக்கு உள்ளாகின.அதாவது 23 லட்சம் உக்ரேனியர்களும் 28 லட்சம் ரஸ்யர்களும் 16 லட்சம் பெலாரசியர்களும் பாதிக்கப்பட்டனர்.
                 மீட்புப் பணிக்காக சென்றவர்களில் 15 ஆயிரம் பேர் இறந்தனர்.5 ஆயிரம் பேருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து போயின.பாதுகாப்பிற்காக  செர்னோபிலை சுற்றியிருந்த பல நகரங்கள் காலி செய்யப்பட்டனர்.மீட்புப்பணியில் ஈடுபட்ட பொருட்கள் ஹெலிகாப்டர்கள் கூட அப்படியே விடப்பட்டனர்.
                
  கதிரியக்கத்தின் தாக்கம்
  விபத்து நடந்து 15 அண்டுகள் ஆகியும் கதிரியக்கத்தின் பாதிப்பு இன்றும் உள்ளது.செர்னோபிலில் கிடைக்கும் இறைச்சி காய்கறிகளில் இன்னமும் கதிரியக்கம் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
                பாதிக்கப்பட்ட பகுதிகளில் தைராய்டு புற்று நோய் அதிகமாக உள்ளது.50 ஆயிரம் பேர் வரை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போதும் உக்ரேனில் பிறக்கும் குழந்தைகளில் 24 சதவீத குழந்தைகள் கோளாறுடன் தான் பிறக்கின்றன.அணுவின் ஆக்கத்திற்கான சக்திகள் பல இருந்தாலும் அதைவிட அதிகமாக அழிவு சக்தி இருக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிய சம்பவம் செர்னோபில்.


  அணு உலை அதன் அழிவு முகத்தை காண்பிக்கும் போது அதை தாங்கிக்கொள்ளும் வலிமை மனித இனத்திற்கு இல்லை.என்பது தான் நிதர்சனமான உண்மை 


  நன்றி:தினத்தந்தி நாளிதழ். தினம் ஒரு தகவல்(03-10-2011)
  IPL பட உதவி:மனசாட்சி
  Share
  எனது பதிவு பிடித்திருக்கிறதா?

  புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

  பின்தொடர

  14 comments:

  1. அணு உலையால் எவ்வளவு பாதிப்பு. அப்பா....
   யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் சதீஷ்

   ReplyDelete
  2. பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

   IPL பகிர்வுக்கும்.

   ReplyDelete
  3. தேவையான நேரத்தில் வந்த பதிவு!

   ReplyDelete
  4. நல்ல பயனுள்ள பதிவு

   ReplyDelete
  5. செர்னோபில் அணுஉலை 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது இருந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. தற்போது அணுஉலை கட்டுமானத்தில் எவ்வளவோ புதியதொழில்நுட்பம் வந்துள்ளது இதனை மறந்துவிடக் கூடாது..!

   தகவலுக்கு நன்றி நண்பா ..!

   ReplyDelete
   Replies
   1. நண்பா அணுஉலை சாதாரணமாக இயங்கும் போதே அதிலிருந்து கதிரியக்கம் வெளியாகும்.அதிலிருந்து வெளிவரும் சீசியம் போன்ற கதிரியக்கங்கள் நம்மை தாக்கும் போது குழந்தைகள் கோளாறுடனும் புற்றுநோய் போன்றவைகளால் பாதிப்பு உள்ளாகும்

    Delete
   2. ஒரு தப்பை எவ்வளவுதான் பொறுப்பாக கவனத்தோடு செய்தாலும் அது தப்பு தானே நண்பரே...


    அணு உலை அணு அணுவாக கொல்லும்...அவ்வப்போது மொத்தமாயும்....

    Delete
  6. பதைபதைக்க வைக்கும் உண்மைகள். பயமுறுத்தும் உண்மைகள்.

   ReplyDelete
  7. தம்பீ!
   தனித இனம் தன் தேவைகளைச் சுருக்கிக் கொண்டால்
   இத்தகை ஆபத்துக்கள் குறையும்! செய்யுமா?

   சா இராமாநுசம்

   ReplyDelete
  8. பயனுள்ள தகவல் நன்றி

   ReplyDelete
  9. நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு. இவற்றையெல்லாம் அறிந்திருந்தும் இந்திய அரசு கூடங்குளத்தில் அணுநிலையத்தை செயற்படவைப்பதில் காட்டும் தீவிரம் வேதனைதருகிறது

   ReplyDelete
  10. எதில்தான் பாதிப்பில்லை..??நடந்து போகும்போது கல் தடுக்கி வ்ழுந்துசாகிறான் அதற்காக கல்லே இருக்கக் கூடாது என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ,தண்ணீர்குடிக்கும்போது தொண்டை அடைத்துச் சாகிறான் அதற்காக தண்ணீரே வேண்டாம் என்பது எவ்வளௌ எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ,சாலையில் நடந்தால் மரணம் ஏற்படுகிறது என்பதற்காக சலையே இருக்ககூடாது ,நடக்கவே கூடாது என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அதுபோல்தான் இதுவும்...

   ReplyDelete
   Replies
   1. அணுஉலை வேண்டும் என்று சொல்கிற அனைவரும் பாடிய வசனத்தையே பாடுகிறீர்கள்.கொஞ்சம் மாற்றி பாடுங்கள்

    நீங்கள் சொன்ன அவ்வளவும் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் நடக்கக்கூடியது ஆனால் இது வெடித்தால் தமிழினத்தை அழித்துவிடும்.இயங்கினால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் பல்லாயிரக்கணக்காண மக்கள்பாதிப்புக்கு உள்ளாவார்கள்

    Delete

   

  FaceBook Followers

  Followers