Social Icons

  • Thursday, September 15, 2011

    42 தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    அன்பு நண்பர்களே,
    தமிழகத்தை அழிவிலிருந்து காக்க 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று சரியாக 7.30 மணியளவில் எங்கள்(இராதாபுரம்) சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் திரு.மைக்கேல் ராயப்பன் இந்த 127-பேருடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்


    அவரை சட்டமன்றத்தில் இந்த உண்ணாவிரத்தைப் பற்றி பேச கூட விடவில்லையாம்.

    இன்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோர் முகம் வாடி ஒருவர் ஒருவராக மயக்கம் போட்ட நிலையில் இருந்தன.இதில் ஒரு ஊணமுற்றோரும் உண்டு.

    பிறகு மாநில அரசிடமிருந்து ஒரு தகவல் வந்தது.அது என்னவென்றால் அவர்கள் எங்களிடம் பேச முன்வந்துள்ளார்கள்.அதற்க்காக தமிழக அரசு தமிழக சட்டமன்ற உறுப்பினர் 5-பேரை இராதாபுரத்துக்கு போய் பேசுமாறு சொல்லி இருக்கிறார்கள்.அதன்படி அந்த 5 சட்டமன்ற உறுப்பினரும் இராதாபுரத்துக்கு வந்தனர்.

    இவர்களை நாங்கள் தான் நேரில் சென்று பேச வேண்டுமாம்.இதை மேடையில் அறிவித்தவுடன் அலைகடலாய் திரண்டு இருந்த மக்கள் அவர்களை இங்கே வந்து பார்க்க சொல்லுங்கள் நாம் போக வேண்டாம்”என்று சத்தம் போட்டனர்.மக்கள் பலர் போராட்டத்தை விட்டு வெளியேரவும் செய்தனர்.

    பிறகு மக்களை சமாதனப்படுத்திவிட்டு 16-பேர் இராதாபுரத்தை நோக்கி சென்றனர்.போனவர்கள் 8.00 மணி ஆகியும் காணவில்லை.

    பிறகு மேடையில் இருந்தவர்கள் முடிவை உங்கள் கிராமத்துக்கு சொல்லிவிடுகிறோம்.நீங்கள் வீட்டுக்கு சென்று வாருங்கள் என்று அறிவித்தனர்.நல்ல முடிவை எதிர்பார்த்து இருக்கிறோம்

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    42 comments:

    1. போராட்டம் வெற்றி பெற்று... நமது உறவுகள் மகிழ்வு பெற வேண்டும்

      ReplyDelete
    2. மக்கள் குறையை அமைச்சர்கள்தான் நேரில் வந்து அறியவேண்டும் இதென்ன அவிங்களை போயி பார்க்குறது சரியில்லையே...

      ReplyDelete
    3. http://reverienreality.blogspot.com/2011/09/blog-post_15.html

      மேற்கண்ட இணைப்பில் உள்ள பதிவை படித்து அனைத்து இனைய தள பயனாளிகளையும் ஓர் அணியில் திரள செய்வோம்..

      ReplyDelete
    4. இந்த போராட்டதம் வெல்ல வேண்டும் என்பதை மட்டுமே எம்மால் பிரார்த்திக்க முடிகிறது சகோதரம்.

      ReplyDelete
    5. கூடல் பாலா எப்படி உள்ளார்?

      ReplyDelete
    6. வேதனையான தகவல் நண்பா,
      இப் போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்,
      கூடங் குளம் மக்களின் உயிருக்கு உத்தரவாதமளித்து அரசு நல்ல தீர்வினைத் தர வேண்டும் நண்பா.

      ReplyDelete
    7. நல்ல முடிவுக்காகக் காத்திருப்போம்.

      ReplyDelete
    8. அடக்கம் செய்யவா அறிவியல்?

      127 பேரின் மனக் குமுறல்..

      கேள்விகளாக..

      http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

      ReplyDelete
    9. அருமை நண்பரே...உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்...

      முடிந்தால் பிரதமருக்கும் முதல்வருக்கும் உங்கள் எதிர்ப்பை உரக்க சொல்லுங்கள்

      மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை.
      மனித உயிர் கொல்லும் கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுங்கள்.இல்லையெனில் உடனே உங்கள் இருவர் இல்லத்தையும் கூடன்குளத்துக்கு மாற்றுங்கள்.

      Take steps to close Koodankulam Nuclear Power Plant immediately to avoid another Chernobyl disaster.
      இதை வாசிக்கும் அனைவரும் கீழ்க்கண்ட இணைப்புகளின் மூலம் பிரதமருக்கும் முதல்வருக்கும் உங்கள் எதிர்ப்பை உரக்க சொல்லுங்கள்...(Just Cut and paste the above)

      http://pmindia.gov.in/feedback.htm
      cmcell@tn.gov.in

      ReplyDelete
    10. இந்த போராட்டம் வெல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

      ReplyDelete
    11. போராட்டம் வெல்லட்டும்.

      ReplyDelete
    12. இந்தப் போராட்டம் நிச்சயம் வெல்லும். இது நமக்காய் மட்டுமல்ல நம்மக்குப் பின் வரும் சந்ததிக்காவுமே.

      இதையும் படியுங்கள் - கூடங்குளம் அணு உலை பேரழிவு
      http://unmayapoyya.blogspot.com/2011/09/blog-post_15.html

      ReplyDelete
    13. இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும்..

      ReplyDelete
    14. தங்களின் வருகைக்கும் கருத்துரையிட்ட அணைவருக்கும் நன்றி.
      மற்றும் அணுஉலையின் ஆபத்துகளை பற்றி விவரித்து தங்கள் வலைதளத்தில் எழுதிய நல்ல உள்ளங்களுக்கு எனது கோடான கோடி நன்றி நண்பர்களே

      ReplyDelete
    15. நேற்று கூடல்பாலாவின் முகம் வாடி இருந்நது.இன்று உண்ணாவிரதம் இருந்தவர்களை பார்க்க அனுமதி தரவில்லை.
      காரணம் அணைவரும் அவர்களை சுற்றி இருப்பதால் அவர்களுக்கு காற்று வரவில்லை.

      சாப்பாடும் இல்லை காற்றும் இல்லை என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்.

      ReplyDelete
    16. இந்த போரட்டம் முழுமையான வெற்றி பெற்று எம் மக்கள் களிப்புடன் வாழ பிரார்த்திக்கிறேன் நண்பரே

      ReplyDelete
    17. இந்த போராட்டம் வெல்ல வேண்டும்.

      ReplyDelete
    18. வருகைக்கும் கருத்துரையிட்ட Mahan.Thamesh,S.Kumar அவர்களுக்கும் நன்றின்க

      ReplyDelete
    19. நண்பரே உங்கள் தொலைபேசி எண் மற்றும் கூடல் பாலா எண்ணை எனக்கு மின்னஞ்சல் செய்யவும். நான் இது குறித்து ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருகிறேன்.

      ReplyDelete
    20. எனது நம்பர்:7373622691

      கூடல் பாலா நம்பர்:9940771407

      ReplyDelete
    21. ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருவதற்கு மனமார்ந்த நன்றி நண்பரே

      ReplyDelete
    22. விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்படவேண்டும் என்பதே என் ஆவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!

      ReplyDelete
    23. நண்பா! ஒரு சிறு வேண்டுகோள். widgeo counter நிறுவியுள்ளதால், வலைப்பக்கத்தில் எங்கு க்ளிக் பண்ணினாலும் விட்ஜியோ விளம்பரம் வந்து தொல்லை தருகிறது. விருப்பமிருந்தால் அதனை நீக்கவும்.

      ReplyDelete
    24. விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்படவேண்டும் என்பதே என் ஆவல்.
      நன்றி நண்பா.

      ReplyDelete
    25. எனக்கு widgeo counter மிகவும் பிடித்திருக்கிறது.தளத்திற்கு அழகு சேர்க்க்கிறது
      2 widgeo counterகள் மற்றும் அலெக்ஸா Widjet இம்மூன்றும் ஒரே இடத்தில் இருப்பதால் அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
      நீங்கள் சொன்ன பிறகு இப்போது Poll விட்ஜெடை எனது தளத்தில் இணைத்து இருக்கிறேன்.நண்பர்களின் இடும் ஓட்டை பொறுத்து முடிவு எடுக்கிறேன் நண்பா.

      என்னை மன்னித்து விடுங்கள் நண்பா

      ReplyDelete
    26. கெட்டும் புத்தி வரவில்லை’ என்பார்கள். அந்த நிலையில் நாம் இருக்கிறோம். அழிவிலிருந்து மக்களை காக்க போராடும் இந்த அறவழி போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

      ReplyDelete
    27. ஆம் நண்பரே.என்ன செய்வது.

      போராட்டம் கண்டிப்பாக வெல்லும்.நம்பிக்கையோடு இருப்போம்.நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்

      ReplyDelete
    28. நியாயமான கோரிக்கைகான இந்தப் போராட்டம்
      நிச்சயம் வெல்லும்

      ReplyDelete
    29. ஆம் நண்பரே.போராட்டம் வெல்லும்

      ReplyDelete
    30. அவர்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும் .

      அணுமின் நிலையம் செயல் படவேண்டாம்.

      போராடும் அனைத்து இதயங்களும் வெற்றி மகிழ்ச்சியோடு தான் வீடு திரும்பும்.

      ReplyDelete
    31. இந்த அற நிலைப்போராட்டம் வெற்றி பெற வேண்டும்.
      வெற்றி பெரும் என்று நம்புவோம்.

      ReplyDelete
    32. கூடி நிற்போம்
      கூக்குரலிடுவோம்
      கூடங்குளம் மூடும்வரை
      ...
      போராட்டம் வெற்றி பெரும் வரை
      .....

      ReplyDelete
    33. கண்டிப்பாக நல்லது நடக்கும். அதுவரை உண்ணாவிரதம் இருப்பவர்கள் பொறுமை காக்க வேண்டும்.

      ReplyDelete
    34. M.R நன்றி
      Lakshmi நன்றி
      மகேந்திரன்நன்றி
      N.H.பிரசாத் நன்றி

      ReplyDelete
    35. கூடங்குளம் மூடும்வரை என்று சொல்லாதீர்கள் நண்பரே
      கூடங்குளம் அணுஉலை மூடும்வரை என்று சொல்லுங்கள்

      ReplyDelete
    36. கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    37. இதை வாசிக்கும் அனைவரும் கீழ்க்கண்ட இணைப்புகளின் மூலம் பிரதமருக்கும் முதல்வருக்கும் உங்கள் எதிர்ப்பை உரக்க சொல்லுங்கள்...(Just Cut and paste the above)

      http://pmindia.gov.in/feedback.htm
      cmcell@tn.gov.in

      நான் அனுப்பிட்டேன் நண்பர்களே

      ReplyDelete
    38. நண்பரே ... காலையில் உங்கள் தளத்தை பார்வையிடும் போது அநாமதேயர் வெளியிட்டிருந்த கருத்துகளை பார்த்தேன் . ஏன் அவைகளை நீக்கி விட்டர்கள் . இது ஒரு கருத்து பரிமாற்றம் தானே

      அவர் கேட்ட கேள்வியில் நியாயம் உள்ளது தானே. 15 வருடங்களாக MLA ஆக இருந்த திரு அப்பாவு அவர்கள் இப்போது அணு உலையை எதிர்ப்பது வேடிக்கை தானே. தலைவர்கள் தூண்டி விட்டு கொண்டிருக்க ஒரு பாவமும் அறியாத என் பரதவ குல மக்கள் ஏன் பாதிக்க பட வேண்டும்..? உண்மையை சொன்னால் ஏற்று கொள்ளுவதற்கு மனம் வேண்டும்

      நீங்கள் போராட வந்து விட்டு ... அப்பாவி மக்களை வேலைக்கு போக விடாமல் தடுக்கிறீர்கள் . இது எந்த விதத்தில் நியாயம் .? பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறீர்கள். பள்ளிக்கு செல்லும் மாணவ மணிகளை போராட்டத்திற்கு தூண்டுகிறீர்கள் ...? இது தான் உங்கள் அஹிம்சை என்றால் ... நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம்

      ReplyDelete
    39. நான் எந்த கருத்துரையும் நீக்கவில்லை நண்பரே.அவர்கள் நீக்கியதாகவும் தெரியவில்லை.நன்றாக தேடிப்பாருங்கள்

      http://vairaisathish.blogspot.com/2011/09/6.html

      இந்த முகவரியில் 19-வது கருத்தை பாருங்கள்

      நண்பரே

      அவர் கேட்ட கேள்வி நியாமானது தான் நான் இல்லை என்று சொல்லவில்லை

      நீங்கள் தமிழ்நாட்டை சொர்நோபில் புகுஷிமா மாதிரி ஆக சொல்கிறீர்களா?சொல்லுங்கள்

      அநாமதேயருக்கு சொன்னதுதான் உங்களுக்கும் நண்பரே

      “1.ஆபத்து வந்தால் மணியடிப்பார்கள்
      2.முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்
      3.யார் வீடு என்று பார்க்காமல் உள்ளே நுழைந்து கதவு ஜன்னல்களை மூடிக்கொள்ள வேண்டும்
      4.அவர்கள் தரும் மருந்தைதான் சாப்பிட வேண்டும்”

      என்று அன்றைக்கு சொன்னார்களா? சொல்லுங்கள் நண்பரே சொல்லுங்கள்.

      இந்த போராட்டம் இன்று தான் நடக்கிறது என்று நினைப்பதை கைவிடவும்.

      1988-ல் இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் கூடன்குளத்தில் அணுமின்நிலையம் வைப்பதற்க்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

      அதனை கண்டித்து போராட்டம் நடத்தியதால் தான் 12 வருடம் கழித்து கூடன்குளம் அணுமின்நிலைய பணிகள் தொடங்கியது

      ReplyDelete
    40. தங்களது கருத்து தவறானது. போர்ரட்டத்தினால் 12 வருடம் தாமதமாகவில்லை. USSR என்ற ஐக்கிய சோவியத் உடைந்ததால் தான் பணிகள் தாமதமானது என்பதே உண்மை.

      அணு உலையை பற்றி ஒரு பொறியாளரான உங்களலாலேயே புரிந்து கொள்ள முடியாத போது , பள்ளி மாணவ மணிகளை போராட்டத்தில் ஈடுபடுத்துவது சரியா...? அது சமுகத்திற்கு நன்மை பயக்குமா..?

      ReplyDelete
    41. இந்த போராட்டம் இன்றா நடக்கிறது?

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers