நான் நேற்று சொன்ன இடுகையில் 16-பேர் இராதாபுரத்தை நோக்கி சென்றனர்.போனவர்கள் 8.00 மணி ஆகியும் காணவில்லை என்றேன்.அந்த 5-பேரும் கூடன்குளத்தில் அமைந்திருப்பது அழிவைத் தராது.எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டு
அம்மாவை சந்தியுங்கள் என்றனர்.
அதற்கு மக்கள் இப்போதுகூட அம்மாவை சந்திக்கிறோம்.ஆனால் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம் என்று சத்தம் போட்டனர்.
நாம் போராடுவதே அணுஉலை வேண்டாம் என்று இவர்கள் என்னவென்றால் அழிவை தராது எல்லாம் அனுசக்தி துறை அமைப்பினர் பார்த்துக் கொள்வார்கள் என்று கதை விடுகிறார்கள்.
அணுஉலையை தொடங்கினால் தமிழர்களின் அழிவை அனுசக்தி துறை அமைப்பினர் பார்க்க தான் செய்வார்கள்.வேறு ஒன்றும் செய்ய மாட்டார்கள்
பிறகு ஒரு செய்தி வந்தது உண்ணாவிரதத்தை தொடர்ந்தால் கூடன்குளம் இடிந்தகரையை சுற்றியுள்ள பகுதிகளில் மின்இனைப்பை துண்டித்துவிடுவார்களாம்.இது என்ன கொடுமை?
இன்று பக்கத்து ஊர் கல்லூரியில் இருந்தும் மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தனர்.போராட்டத்தில் மாணவர் கூட்டனி திரண்டு இருந்தது.
நமக்கு ஆதரவாய் திமுக கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்துள்ளது.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் 24-பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்களாம்.
இது இன்று எடுத்த படம் அல்ல
ஆனால் ஒன்று மட்டும் உண்மை அணுஉலையை மூடும் வரை உண்ணாவிரதம் தொடரும்.
இவர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லும்?
டிஸ்கி:கூகுளின் அதிரடி சாதனை பதிவை 2 நாள்களுக்கு பிறகு PUBLISH செய்கிறேன்
அம்மாவை சந்தியுங்கள் என்றனர்.
அதற்கு மக்கள் இப்போதுகூட அம்மாவை சந்திக்கிறோம்.ஆனால் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம் என்று சத்தம் போட்டனர்.
நாம் போராடுவதே அணுஉலை வேண்டாம் என்று இவர்கள் என்னவென்றால் அழிவை தராது எல்லாம் அனுசக்தி துறை அமைப்பினர் பார்த்துக் கொள்வார்கள் என்று கதை விடுகிறார்கள்.
அணுஉலையை தொடங்கினால் தமிழர்களின் அழிவை அனுசக்தி துறை அமைப்பினர் பார்க்க தான் செய்வார்கள்.வேறு ஒன்றும் செய்ய மாட்டார்கள்
பிறகு ஒரு செய்தி வந்தது உண்ணாவிரதத்தை தொடர்ந்தால் கூடன்குளம் இடிந்தகரையை சுற்றியுள்ள பகுதிகளில் மின்இனைப்பை துண்டித்துவிடுவார்களாம்.இது என்ன கொடுமை?
இன்று பக்கத்து ஊர் கல்லூரியில் இருந்தும் மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தனர்.போராட்டத்தில் மாணவர் கூட்டனி திரண்டு இருந்தது.
நமக்கு ஆதரவாய் திமுக கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்துள்ளது.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் 24-பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்களாம்.
இது இன்று எடுத்த படம் அல்ல
ஆனால் ஒன்று மட்டும் உண்மை அணுஉலையை மூடும் வரை உண்ணாவிரதம் தொடரும்.
இவர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லும்?
டிஸ்கி:கூகுளின் அதிரடி சாதனை பதிவை 2 நாள்களுக்கு பிறகு PUBLISH செய்கிறேன்
Share | Tweet |
|
நன்றி நண்பரே...உங்கள் நேரடி ரிப்போர்ட்க்கு...
ReplyDeleteகீழ்க்கண்ட இணைப்புகளின் மூலம் பிரதமருக்கும் முதல்வருக்கும் உங்கள் எதிர்ப்பை உரக்க சொல்லுங்கள்.நன்றி..
பிரதமருக்கு
http://pmindia.gov.in/feedback.htm
முதல்வருக்கு
cmcell@tn.gov.in
இன்று நம் முதல்வர்...உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் என்கிறார்...தைரியம் இருந்தால் வீட்டை கூடன்குளத்துக்கு மாற்றவேண்டியது தானே..அப்போது முடியும் இந்த போராட்டம்...
ReplyDeleteporaattam mudivukku vara vendum.. arasu viraivil nadavadikkai edukka vendum.
ReplyDelete//பிறகு ஒரு செய்தி வந்தது உண்ணாவிரதத்தை தொடர்ந்தால் கூடன்குளம் இடிந்தகரையை சுற்றியுள்ள பகுதிகளில் மின்இனைப்பை துண்டித்துவிடுவார்களாம்.இது என்ன கொடுமை?//
ReplyDeleteஇப்படியெல்லாம் மக்களை வீழ்த்த முடியாது.
//இப்படியெல்லாம் மக்களை வீழ்த்த முடியாது//
ReplyDeleteநமக்கு தெரிகிறது அரசுக்கு தெரியமாட்டேங்குதே
ஜனநாயகம் மறுக்கப்பட்ட அரசும், அரசியல் என்பது மக்களுக்கான ஒன்று என்பதை மறந்த அரசியல்வாதிகளும் உள்ள இந்தியாவில் நம் எதிர்காலம் குறித்த அல்லல்ல நம் வாழ்க்கைக்கான போராட்டத்தை ஒடுக்க மின் துண்டிப்பா ஹா ஹா, மிரட்டலுக்கு பயந்து கட்சி மாறும் அரசியல்வாதிகள் இல்லை நாங்கள், எங்களுக்கு அரசியலும் தேவை இல்லை , உதவ வேண்டாம் ஆனால் வெந்துபோன எங்கள் இதயங்களில் ஈட்டி பாய்ச்ச வேண்டாம் . . .
ReplyDelete//.தைரியம் இருந்தால் வீட்டை கூடன்குளத்துக்கு மாற்றவேண்டியது தானே//
ReplyDeleteநாங்கள் அழிய வேண்டுமாம்
அவர்கள் அங்கே சொகுசாக வாழ்வார்களாம்
boss super report.
ReplyDeleteduty mudiththu vandhu pesalaam.
எனக்கு ஒன்றும் புரியவில்லை . நீங்கள் யாரைத்தான் நம்புவீர்கள் . விஞ்ஞானிகள் , மாவட்ட ஆட்சியர் , முதல்வர் , பிரதமர் ... யாரையும் நம்பமாட்டேன் என்பதற்கு என்ன அர்த்தம்
ReplyDeleteஉங்கள் ஊருக்கு அருகில் உள்ள என் நண்பன் சொன்னான். சில பேரின் சந்தர்ப்பவாததிற்க்கு அப்பாவி மக்களை தூண்டி விடுவதாக. உண்மையா ...? உண்மையில்லை என்றால் பின்னே ஏன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் தியாகிகள் ( ? ) வரப்போகும் தேர்தலுக்கு சீட் கேட்கிறார்கள் என்றும் கேட்க சொன்னான். சொல்லுவீர்களா நண்பரே
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர்கள் சீட் கேட்கவில்லை நண்பரே.அவர்கள் ரொம்ப நேரம் பேசிகொண்டிருந்தால் போராட்டம் அரசியல் ஆகிவிடும் என்று ஒதுங்கிதான் போகிறார்களே தவிர சீட் கேட்கவில்லை
ReplyDeleteதங்கள் பதிலுக்கு நன்றி . என் நண்பன் சொல்லுகிறான் " நீங்கள் விருப்பப்பட்டால் பெயர்களை ஆதாரங்களுடன் சொல்லுவதாக " தங்கள் விருப்பம் என்னவோ ?
ReplyDeleteஉங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்
ReplyDeleteமிகவும் பாதுகாப்பானது என்று கூறும் முதல்வருக்கும் அனாமதேயருக்கும், அப்புறம் என் ரஷ்ய அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விபத்து நிகழ்ந்தால் தாங்கள் பொறுப்பு அல்ல என்று கூறி உள்ளது? அவ்வளவு நம்பிக்கை அமைத்துக் கொடுத்தவர்களுக்கே இல்லை என்றால் யாருக்கு இருக்கும்?
ReplyDeleteதொடருங்கள் ...
ReplyDeleteபிறகு ஒரு செய்தி வந்தது உண்ணாவிரதத்தை தொடர்ந்தால் கூடன்குளம் இடிந்தகரையை சுற்றியுள்ள பகுதிகளில் மின்இனைப்பை துண்டித்துவிடுவார்களாம்.இது என்ன கொடுமை?
ReplyDeleteஇது மனித உரிமைகள் மீறல் .இந்தப் பிரச்சனைக்கெல்லாம் நல்ல தீர்வு
கிட்டவேண்டும் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .....
போராட்டம் வெற்றி பெறட்டும்
ReplyDeleteஎன் வலையில்:
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை
நேரடி விளக்கம் தருகிறீர்கள்... நமது அரசுகளுக்கு மக்கள் மீதான அக்கரை என்றோ போய்விட்டது.. இந்த காலத்தில் ஒரு இரோம் ஷர்மிளா மாதிரிதான் எல்லோரும் நடத்தப்படுவார்கள். அரசு நடவடிக்கை இதனால் எடுக்க வாய்ப்பில்லை. இதில் சிலர் மரணித்தாலும் அது பற்றிய அக்கரை அரசுக்கு சுத்தமாக இல்லை என்பதே நிதர்சனம். அவர்களுக்கு நிவாரணமாக சில ஆயிரங்களை வீசிவிட்டு மற்றவர்களை எப்படி ஒடுக்குவது என்பதில் கவனம் செலுத்துவார்கள்.
ReplyDeleteஉண்ணாவிரதம் இருந்து உடம்பை நலித்துக் கொள்வதைவிட வேறு விதமான போராட்டங்களில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்... இது உண்மையான அக்கரையில் ஒரு சாமானியன் தரும் சிறு ஆலோசனை..
தங்கள் போராட்டம் வெல்ல வாழ்த்துக்களும் என் பிரார்த்தனைகளும்...
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
மின் இணைப்பைத் துண்டிப்பதா?இது என்ன அநியாயம்?
ReplyDeleteஎந்த விதமான இழப்புமின்றி போராட்டம் வெற்றி பெறட்டும்.
ஐயா .., இதெல்லாம் சில அரசியல் சதுரங்கங்கள் .... ஆனால் நம்புவதற்கு யாரும் இல்லை. 15 வருடங்களாக MLA ஆக இருந்த திரு. அப்பாவு அவர்கள் இப்பொழுது அணு உலை வேண்டாம் என்கிறார் என்றால் இந்த போராட்டம் சில பேரின் சதி என்று நான் ஏன் சந்தேகிக்க கூடாது
ReplyDeleteஎன்னுடைய கவலை எல்லாம் சிலரின் சுய லாபத்திற்காக ஏன் குலம் சாக வேண்டும் .... பொது மக்களே சிந்திப்பீர்
எந்த மிரட்டலும் உண்மையான போராட்ட வீரனை அசைத்து விடக் கூடாது. இந்தப் பிரச்சனை தமிழகத்தின் கடைக் கோடியில் உள்ள பிரச்சனை அல்ல. அனைவருடைய பிரச்சனை. உண்மையான இந்தப் போராட்டம் எப்போது அதிகாரிகளின் மனச் சாட்சியைத் தொடுகிரதேன்று.
ReplyDeleteஇதில் என்ன சதி நண்பரே
ReplyDelete“ஆபத்து வந்தால் மணியடிப்பார்கள்
முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்
யார் வீடு என்று பார்க்காமல் உள்ளே நுழைந்து கதவு ஜன்னல்களை மூடிக்கொள்ள வேண்டும்”
என்று அன்றைக்கு சொன்னார்களா?
அணு உலையின் தீமைகளை விவரித்து நம் பதிவுலக நண்பர்கள் அழகாகவும் புரியும்படியும் விவரித்துள்ளார்கள்
அணு உலையின் தீமைகள் பற்றி நம் பதிவுலக நண்பர்கள் இட்ட கருத்துகளை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்
அணு உலையின் தீமைகள் பற்றிய Link உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள் தருகிறேன்
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்?
ReplyDeleteஇன்னும் சத்தமிட்டுக் கேட்போம்..
இந்த போராட்டம் இன்று தான் நடக்கிறது என்று நினைப்பதை கைவிடவும்.
ReplyDelete1988-ல் இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் கூடன்குளத்தில் அணுமின்நிலையம் வைப்பதற்க்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதனை கண்டித்து போராட்டம் நடத்தியதால் தான் 12 வருடம் கழித்து கூடன்குளம் அணுமின்நிலைய பணிகள் தொடங்கியது
என்பதை நினைவில் வைக்கவும்
பல உயிர்களை காப்பாற்றுவதற்காக இங்கே சில உயிர்கள் விஷம பரீட்சையில் கிடக்கின்றது.
ReplyDeleteமின்சாரம் இல்லாமல் வாழ்ந்திடலாம் ஆனால் உயிர்கள் இல்லாமல் வாழ முடியாது பொதுமக்கள்களின் கருத்துகளை நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதே ஆட்சியாளர்களின் பொறுப்பு அதே நேரத்தில் எதிர் கட்சிகளும் ஆளும் கட்சியை வீழ்த்துவதற்க்காக அப்பாவிகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
காந்திய வழியில் போராட்டம் நடக்கின்றது ஆனால் யாரும் காந்தியாகி விட முடியாது.
உங்கள் குடும்பங்களையும் மனதில் நினைத்து போராடுங்கள் தங்களை தாங்களே வறுத்திக் கொள்ளாதிர்கள்.
அம்மக்கள்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் அதே நேரத்தில் அரசுக்கும் தர்ம சங்கடங்களை கொடுப்பதை பொது மக்கள்கள் நிறுத்தியால்தான் அரசின் கவனம் நாட்டின் நலம் பக்கம் திரும்பும்.
அன்றாடம் நாம் அவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்போமேயானல் நாட்டின் வளர்ச்சியும் சமுதாய வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு தமிழ் நாடு இருட்டு நிறத்தை பெற வேண்டி வரும் என்பதை எல்லோரும் மனதில் கொண்டு அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் போராட முன்வரனும்.
வாழ்த்துக்கள் தோழா.
உங்கள் கருத்துகளை நான் ஏற்கிறேன் நண்பா
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்தை இட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
ReplyDeleteஎதிர் கருத்தை இட்டவர்களுக்கு Special thanks
//தங்கள் பதிலுக்கு நன்றி . என் நண்பன் சொல்லுகிறான் " நீங்கள் விருப்பப்பட்டால் பெயர்களை ஆதாரங்களுடன் சொல்லுவதாக " தங்கள் விருப்பம் என்னவோ ?//
ReplyDeleteஉங்கள் நண்பருக்கு எந்த ஊரு நண்பா
கண்டிப்பாக வெற்றி பெறுவோம் நண்பா...
ReplyDeleteவாழ்த்துகள்...
இன்றைய எனது பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன் நண்பரே..
ReplyDeleteஒன்றிணைந்து ஓங்கிக்குரல் கொடுப்போம் எழுப்பும் குரல் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்படி செய்வோம்
வெற்றி நமதே.. வெற்றி நமதே..
நட்புடன்
சம்பத்குமார்
வெற்றி உறுதி ஐயம் தேவையில்லை
ReplyDeleteநன்றி தம்பீ!
மீண்டும் சந்திப்போம்
புலவர் சா இராமாநுசம்
நாம் போராடுவதே அணுஉலை வேண்டாம் என்று இவர்கள் என்னவென்றால் அழிவை தராது எல்லாம் அனுசக்தி துறை அமைப்பினர் பார்த்துக் கொள்வார்கள் என்று கதை விடுகிறார்கள்.
ReplyDeleteஅணுஉலையை தொடங்கினால் தமிழர்களின் அழிவை அனுசக்தி துறை அமைப்பினர் பார்க்க தான் செய்வார்கள்.வேறு ஒன்றும் செய்ய மாட்டார்கள்//வெற்றி நமதே.. வெற்றி நமதே
எப்போதும் தர்மமே வெல்லும் சகோதரா....
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராஜா MVS
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சம்பத்குமார்
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி புலவர் சா இராமாநுசம்
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாலதி
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ம.தி.சுதா
தங்களது கருத்து தவறானது. போர்ரட்டத்தினால் 12 வருடம் தாமதமாகவில்லை. USSR என்ற ஐக்கிய சோவியத் உடைந்ததால் தான் பணிகள் தாமதமானது என்பதே உண்மை.
ReplyDeleteஅணு உலையை பற்றி ஒரு பொறியாளரான உங்களலாலேயே புரிந்து கொள்ள முடியாத போது , பள்ளி மாணவ மணிகளை போராட்டத்தில் ஈடுபடுத்துவது சரியா...? அது சமுகத்திற்கு நன்மை பயக்குமா..?
வணக்கம் நண்பா,
ReplyDeleteவீக்கெண்ட் பிசியாகிட்டேன்,
கூடங்குளம் மக்களின் மன உறுதிக்குத் தலை வணங்குகின்றேன்,.
இப் போராட்டம் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்,