Social Icons

  • Wednesday, September 14, 2011

    23 4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

    அன்பு நண்பர்களே,
    தமிழகத்தை அழிவிலிருந்து காக்க 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.இதில் நம் நண்பரான கூடல் பாலாவும் கலந்துகொண்டுள்ளார்.அவர் முகமே வாடிபோய் விட்டது.
    உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளவர்களை
    பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.எனவே இதை எதிர்த்து போராடுவோம் நண்பர்களே தமிழகத்தை அழிவிலிருந்து காப்போம் நண்பர்களே!!!

    இன்று கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக 4-வது நாளாக பொதுமக்கள் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்திய போதும் நமது மத்திய அரசோ மாநில அரசோ ஒரு தகவல் கூட தரவில்லை

    4-வது நாள் போராட்டாமான இன்று 127-பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.அவர்களுக்கு ஆதரவாய் சுமார் 12000க்கும் அதிகமானோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டோம்.
    அதில் பள்ளி மாணவர்களும் உண்டு.உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கன்னியாகுமரியிலிருந்தும் மாணவர்கள் வந்தனர்
    இன்று செந்தமிழன் சீமான் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    நாளை காலை 9.00 மணிக்குள் மத்திய/மாநில அரசிடமிருந்து முடிவு வரவில்லை என்றால் நாளைய போராட்டம் வேறுவிதமாக இருக்கும் என்று அறிவித்தனர்.








    மொபைலில் எடுத்த படம் அதான் தெளிவு இல்லை நண்பர்களே!!!

    குறிப்பு:இதை நீங்கள் Copy/Paste செய்து தமிழர்களுக்கு,தமிழ் பதிவர்களுக்கு தெரியபடுத்துங்கள் நண்பர்களே
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    23 comments:

    1. You done a good job frnd, Wishes . . .

      ReplyDelete
    2. போராட்டம் வெற்றியை நோக்கி ...வாழ்த்துக்கள் ...

      ReplyDelete
    3. வணக்கமையா நான் காட்டான் வந்திருக்கேன்யா..

       நீங்களும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டதற்கு வாழ்த்துக்களய்யா.. கூடல் பாலாவையும் அவருடன் உண்ணாவிரதமிருப்பாரையும் நினைத்து மனம் துடிக்கின்றது இப்போராட்டம் வெற்றிபெற உறுதுனையாய் இருப்போம்...

      காட்டான் குழ போட்டான்..

      ReplyDelete
    4. நன்றி நண்பர்களே தங்கள் வருகைக்கும் கருத்துரைகளுக்கும்

      ReplyDelete
    5. உண்ண விரதம் வெற்றி பேரும் .. நம்பிக்கையோடு இருங்கள்..

      ReplyDelete
    6. அவ்வளவு எளிதல்ல இந்த போராட்டத்திற்கு அரசின் பார்வையை பெற, நாடு முழுவதும் உற்று நோக்கிய அண்ணாவின் போராட்டத்திர்க்கே எவ்வளவு மெதுவாக அரசு வந்து எட்டி பார்த்தது என்பது அனைவருக்கும் தெரியும்... இன்னும் அதிக சத்தம் வேண்டும்.. அனைவரையும் கூப்பிடுவோம், சத்தம் போட.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை..

      ReplyDelete
    7. உயிர்களின் மதிப்பு அரசுக்குத்
      தெரியவில்லையா?
      புரியவில்லையா?

      அந்த கூட்டத்தையும்
      அவர்களின் கோபத்தையும்
      இயலாமையையும்
      உடல்நிலையையும்
      மனநிலையையும்

      பார்க்கும் போது என்னவோ போல இருக்கிறது நண்பா.

      அழிவு என்றால் அது எல்லோருக்கும் தானே..!!!!

      ReplyDelete
    8. அமாம் suryajeeva&முனைவர்.இரா.குணசீலன்
      நமது இந்திய அரசுக்கு உயிரின் மதிப்பு தெரியவில்லை

      இறந்தால் தான் இவர்கள் எட்டிப்பார்ப்பார்கள் போல

      ReplyDelete
    9. தங்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    10. நன்றி J.P Josephine Baba,காந்தி பனங்கூர்

      ReplyDelete
    11. நான் தொடர்ந்து பேஸ்புக், பஸ், டுவிட்டர், பிளாக் எழுதிட்டுதான் இருக்கேன், போராடுவோம் போராட்டம் வெற்றிபெற....

      ReplyDelete
    12. போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.

      ReplyDelete
    13. அணு மின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.

      ReplyDelete
    14. வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்ல தீர்வு கிடைக்கட்டும்.

      ReplyDelete
    15. இப்படி ஒரு போராட்டம் நடப்பதை ஊடகங்கள் கண்டு கொள்வதே இல்லை .....

      லேப்டாப் ,கிரைண்டர் ,மிக்ஸி ,ஆடு ,மாடு .....
      கொடுப்பதை போடுகிறார்கள் ...

      போராட்டம் வெற்றி பெரும் .....

      நன்றி .....

      ReplyDelete
    16. நல்ல தீர்வு கிடைக்க இறுதி வரை எல்லோரும் ஒற்றுமையாக இருக்கனும்.

      ReplyDelete
    17. போராட்டம் வெற்றி பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

      ReplyDelete
    18. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும் நம்பிகையோடு இருப்போம்.

      ReplyDelete
    19. ஐயா தாங்கள் மருத்துவரா ? அல்லது முனைவரா ...?

      ReplyDelete
    20. தங்கள் வருகைக்கும் கருத்துரையிட்டதற்க்கும் நன்றி

      கும்மாச்சி நன்றி

      Dr.எம்.கே.முருகானந்தன் நன்றி

      KANA VARO நன்றி

      stalin நன்றி

      கணினி மஞ்சம் நன்றி

      M.R நன்றி

      Lakshmi நன்றி

      ReplyDelete
    21. தாங்கள் மருத்துவரா ? அல்லது முனைவரா ...? ஏன் கேட்கிறீர்கள்

      ReplyDelete
    22. உங்கள் நண்பருக்கு எந்த ஊரு நண்பா

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers