Social Icons

 • Sunday, October 9, 2011

  17 மீண்டும் போராட்டம்

  கூடன்குளம் அணுஉலைக்கு எதிராக மூன்றாவது முறையாக போராட்டம் வெடித்துள்ளது

  இன்று திட்டமிட்டபடி கூடன்குளம் அணு உலைக்கு எதிராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்து முடிந்தது.

  இன்றைய அடையாள உண்ணாவிரத போராட்டத்தில்


  ஏற்கனவே தமிழக அரசு கூறியபடி கூடன்குளம் அணுமின் நிலையத்தில் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு வேலையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.ஆனாலும் திட்ட பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

  அதனால் இதனை கண்டித்து நாளையும் நாளை மறுநாளும் (திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்று போராட்டக்குழு அறிவித்தது.மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை) மதியத்திற்குள் எந்த முடிவும் அரசிடம் இருந்து வரவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் மற்றும் காலவறையறையற்ற உண்ணாவிரத போராட்டமாக மாறும் என்றும் அறிவித்தது

  இன்றைய   அடையாள உண்ணாவிரத போராட்ட முடிவில்  உண்ணாவிரதத்தில் கலந்து கொள்பவரின் பெயர் பதிவு செய்யப்பட்டது.இதில் சுமார் 200-க்கும் அதிகமானோர் இருக்கும் என நினைக்கிறேன்.இதில் ஆயர்களும்(Father) உண்டு.

  இன்றைக்குள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது.

  Share
  எனது பதிவு பிடித்திருக்கிறதா?

  புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

  பின்தொடர

  17 comments:

  1. கடந்த முறை நடந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டதன் காரணமாக எனது உடல்நிலை கடும் பாதிபிற்குள்ளானதால் நான் இப்போது ஓய்வில் இருக்கிறேன் .......போராட்டம் வெற்றி இலக்கை அடைய வாழ்த்துகிறேன்.....

   ReplyDelete
  2. அதனால் என்ன அண்ணா.நமது போராட்டம் வெற்றி அடைந்தால் சரி

   ReplyDelete
  3. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

   ReplyDelete
  4. நண்பரே தற்பொழுது போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு. உதயகுமார் அவர்கள் 2007 ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமான பணிகளை பார்வயிட்டு திருப்தி அடைந்தாரே ... பின் ஏன் இப்போது போராட்டத்தை தூண்டுகிறார் என்பது விளங்கவில்லை. தங்களுக்கு இந்த தகவலில் நம்பிக்கை இல்லையெனில் NPCIL நிர்வாகத்தை கேட்டு பாருங்களேன்.

   இதே போல போராட்டத்தில் முன் நிற்கும் மேதகு தூத்துக்குடி ஆயர் அவர்களும் , கிட்டத்தட்ட 30 பாதிரியார்களும் அணு மின் நிலையத்தை சுற்றி பார்த்து திருப்தி அடைந்த பின்பும் , அப்பாவி மக்களை போராட தூண்டுவதன் காரணம் என்னவென்றும் விளங்கவில்லை.

   இது எல்லாவற்றையும் விட , அறிஞர் பெருமக்கள் , விஞ்ஞானிகள் , மாண்புமிகு முதல்வர் , மாண்புமிகு பிரதமர் எல்லாரும் பாதுகாப்பை குறித்து விளக்கம் அளித்தும் , அதை ஏற்றுகொள்ளாமல் நீங்கள் போராடுவதும் ஏற்புடையதாக தெரியவில்லை.

   உண்மையிலே உங்களுக்கு மக்களின் மேல் அக்கறை இருந்தால் , உங்களை விட அதிக அக்கறை கொண்ட அரசை நீங்கள் நம்பாமல் இருப்பதை நினைத்தால் கொஞ்சம் வருத்தம் தான். என்ன செய்ய இது இந்த நாட்டின் விதி.

   ReplyDelete
  5. சகோ. இருதயம் நீங்கள் சொல்லி உள்ள கருத்துகளை பார்த்தால் ஏதோ மக்களை குழப்பி வேடிக்கை பார்க்கும் கும்பல் போல அல்லவா இருக்கிறது .... கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்

   ReplyDelete
  6. @இருதயம்

   அவர்கள் அப்போது பார்வையிட தானே செய்தார்கள்.

   இப்போது அணுமின் நிலையத்தில் வேலை பார்ப்பவர்களே சொல்லுகிறார்கள்.

   நாங்கள் பணத்தை மிச்சபடுத்தினோம்.நாங்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று

   ReplyDelete
  7. .போராட்டம் வெற்றி இலக்கை அடைய வாழ்த்துகிறேன்.....

   ReplyDelete
  8. இருதயம் அவர்களே... நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும் கருத்துதான்... ஆனால் எந்த அசம்பாவிதம் நடந்துவிட்டாலும் அரசு தன் தரப்புத் தவறை ஒத்துக்கொள்ளாது... மிஞ்சிப்போனால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பணஉதவி பண்ணும்.. அதற்க்குமேல் அரசுக்கு தெரியாது... அனைத்துவசதி படைத்த முன்னேறிய நாடுகளே புதிதாக அணு மின்நிலையம் தொடங்கும் பணியை., இதன் பதிப்புக்களை அறிந்த பின் அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டார்கள் என்றால்... நாம் எம்மாத்திரம்...

   ReplyDelete
  9. போராட்டம் முழு வெற்றி பெற வாழ்த்துகள்.....

   ReplyDelete
  10. போராட்டம் வெற்றி இலக்கை அடைய வாழ்த்துகிறேன்.

   ReplyDelete
  11. மக்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

   ReplyDelete
  12. ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்

   ReplyDelete
  13. போராட்டம் வெற்றி இலக்கை அடைய வாழ்த்துகிறேன்.....

   ReplyDelete
  14. தூத்துக்குடி ஆயர் பற்றிச் சொல்லும்போது எனக்கு தூத்துக்குடியின் முன்னாள் ஆயர் (ஆயர் என்றால் பிஷப்தானே...) திரு எஸ் டி அமல்னாதர் நினைவு வந்தது. தஞ்சையில் அவரிடம் பயின்ற மாணவர்களில் ஒருவன் நான். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.

   ReplyDelete
  15. இனிய காலை வணக்கம் பாஸ்,

   நான் வீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகி விட்டேன்.
   தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் ரொம்ப நன்றி பாஸ்.

   ReplyDelete
  16. இம் முறையாவது இந்தப் போராட்டத்திற்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும்!

   நிச்சயம் கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

   ReplyDelete
  17. இன்குலாப் ஜிந்தாபாத்

   ReplyDelete

   

  FaceBook Followers

  Followers